தம்பலகாமம் பிரதேச சபையின் பாதீடு வெற்றி! ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நடுநிலை

Trincomalee Srilanka Muslim Congress Sri Lanka Politician
By Fathima Dec 16, 2025 07:47 AM GMT
Fathima

Fathima

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (16) தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

வாக்கெடுப்பு 

இதில் 11 வாக்குகளால் பாதீடு நிறைவேறியது. நடுநிலையாக 05 பேரும் ஆதரவாக 11 பேரும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.

தம்பலகாமம் பிரதேச சபையின் பாதீடு வெற்றி! ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நடுநிலை | Dhampalakamam Pradeshiya Sabha Budget Victory

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த இருவரும் நடுநிலை வகித்தனர்.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவரே தவிசாளராக செயற்பட்டு வரும் நிலையில் தற்போதைய பாதீட்டின் படி, ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தவிசாளர் உட்பட மூவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த இருவரும், இலங்கை தமிழரசு கட்சி 02,தமிழ் தேசிய மக்கள் முண்ணனி01, ஐக்கிய தேசிய கட்சி01,பொதுஜன பெரமுன,01, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 01 என மொத்தமாக 11 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery