பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Consumer Protection
Egg
By Laksi
பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டைகள் விற்பனை
தற்போது 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதன் அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |