கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர நியமனம்
Anura Kumara Dissanayaka
Sri Lanka Politician
Eastern Province
By Laksi
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிப் பிரமாணமானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.
புதிய ஆளுநர் நியமனம்
இந்நிலையில், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜயந்த லால் ரத்னசேகர கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |