உயர்தரப் பரீட்சை மீள் திருத்தம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவித்தல்

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Sri Lankan Schools Education
By Fathima Sep 07, 2023 06:47 AM GMT
Fathima

Fathima

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (07.09.2023) முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

திணைக்கள இணையத்தளம்

குறித்த விண்ணப்ப படிவத்தை பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை மீள் திருத்தம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவித்தல் | Department Examinations Gce Al Exam Recorrection

இதேவேளை, இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றவிருக்கும் கடந்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

உயர்தரப் பரீட்சை மீள் திருத்தம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவித்தல் | Department Examinations Gce Al Exam Recorrection

இதேவேளை, வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்வியாண்டு 2022/23 இற்கான பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.