நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் எனவும் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7,119 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.