இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Laksi Sep 17, 2024 09:14 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடம் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, மொத்த எண்ணிக்கை 9481 ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் : நான்காயிரத்தை கடந்த முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் : நான்காயிரத்தை கடந்த முறைப்பாடுகள்

டெங்கு நோயாளர்கள்

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 4390 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 2102 நோயாளர்களும் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து 15973 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Dengue Increased In Sri Lanka

மேலும் வடமாகாணத்தில் இருந்து 4742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கருத்தரங்கு நிகழ்வு

அம்பாறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கருத்தரங்கு நிகழ்வு

கிழக்கின் சுற்றுலா மையம் அமைப்பினுடைய தையல் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு செயற்றிட்டம்

கிழக்கின் சுற்றுலா மையம் அமைப்பினுடைய தையல் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு செயற்றிட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW