நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: டெங்கு நோய் பரவும் அபாயம்

Colombo Gampaha Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Mayuri Jun 26, 2024 01:15 PM GMT
Mayuri

Mayuri

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

டெங்கு நோய் அபாயமிக்க மாவட்டங்கள்

அதன்படி, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருணாகல், காலி ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய் அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: டெங்கு நோய் பரவும் அபாயம் | Dengue In Sri Lanka Warning For Colombo People

இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW