இலங்கையில் அதிகரித்துள்ள டெங்கு நோய்

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Fathima Dec 11, 2023 01:11 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000யை தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்கள்  வெளிப்படுத்தியுள்ளன.

டெங்கு தொற்றாளர்கள்

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து நேற்று வரை 80,192 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 3,704 பேர், இந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் அதிகரித்துள்ள டெங்கு நோய் | Dengue Fever In Sri Lanka Current Situation

அத்துடன் மேல் மாகாணத்தில் இந்த ஆண்டில் இதுவரை 47 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 46.4 வீதமான தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில், மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணமாக பார்க்கப்படுகிறது.