கல்முனை அல்- அஸ்ஹரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
கல்முனை கல்வி வலய கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் சுற்றுப்புறச் சூழலை சுத்தப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது பாடசாலை அதிபர் எம்.ஏ. அக்பர் அலி தலைமையில் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் டெங்கு நுளம்புகள் காணப்படக்கூடிய இடங்கள், பொருட்கள் என்பன அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு ஆரோக்கியமான பாடசாலை சூழல் ஏற்படுத்தப்பட்டது.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
இதன்போது, கல்முனை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் நுளம்பியல் ஆய்வு குழுவின் ஆய்வின் படி டெங்கு நுளம்பு அதிகம் பரவும் அபாயம் காணப்படுகின்ற இடங்களில் இந்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |