சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Rakshana MA Jul 05, 2025 05:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

நேற்று 13,642 வளாகங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூழியர் போலி மருந்து சீட்டு தயாரித்து மோசடி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூழியர் போலி மருந்து சீட்டு தயாரித்து மோசடி

டெங்கு கட்டுப்பாடு

இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய 3,886 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில், 382 இடங்கள் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் பெருகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Dengue Control Week In Sri Lanka

396 இடங்கள் டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தமது சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாத 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வரையான காலப்பகுதியில், 111,031 இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 2,999 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவில் பாரபட்சம் பார்த்த ஆசிரியர் : வலயக்கல்வி அதிகாரி விடுத்த அதிரடி உத்தரவு

சுற்றுலாவில் பாரபட்சம் பார்த்த ஆசிரியர் : வலயக்கல்வி அதிகாரி விடுத்த அதிரடி உத்தரவு

காசாவில் உணவு உதவி இனப்படுகொலையின் ஒரு பகுதி! வெளிவரும் உண்மைகள்

காசாவில் உணவு உதவி இனப்படுகொலையின் ஒரு பகுதி! வெளிவரும் உண்மைகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW