மூதூரில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

Trincomalee Climate Change Eastern Province
By Laksi Dec 05, 2024 09:12 AM GMT
Laksi

Laksi

மூதூர் (Mutur) சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது  இன்று (05) மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் ஏற்பட் மழை வெள்ளத்தினால் அதிகளவு டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதோடு, இதுவரை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 125 டெங்கு தொற்றாளர்கள் இணங்காணப்பட்டிருந்த பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

கலந்துரையாடல்

இதன்போது ,தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை இனங்கண்டு அழித்தல், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுதல், டெங்கு தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மூதூரில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் | Dengue Control Meeting At Mutur

இந்தக் கூட்டத்தில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபையின் செயலாளர், மூதூர் சம்பூர் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், மூதூர் தள வைத்தியசாலை நிர்வாகத்தினர்,மூதூர் பிரதேச அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. 

பல பகுதிகளில் உடைத்த தேங்காயின் விலையும் அதிகரிப்பு!

பல பகுதிகளில் உடைத்த தேங்காயின் விலையும் அதிகரிப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW