கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் : ஜோசப் ஸ்ராலின் அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Sri Lankan Schools
By Fathima Oct 22, 2023 12:10 AM GMT
Fathima

Fathima

கொழும்பிலுள்ள கல்வி அமைச்சின் தலைமையகத்துக்கு முன்பாக எதிர்வரும் 24 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சம்மேளனத்தின் பிரதி இணைப்பாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு அழைப்பு

இலங்கையிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு போதுமான நிதி வழங்கப்படாமை பாரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், பாடசாலையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த காரணம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் : ஜோசப் ஸ்ராலின் அறிவிப்பு | Demonstration Ministry Of Education Njoseph Sraul

இதன்படி, 30 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.