அனுமதியற்ற மதுபான சாலைகளுக்கு எதிராக பூநகரியில் ஆர்ப்பாட்டம்
Kilinochchi
SL Protest
By Erimalai
பூநகரி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற மதுபான சாலைகளுக்கு எதிராக பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பூரநகரி பிரதேச அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலகம் முன்பாக தமது கோரிக்கைகளை முன்வைத்த கோசங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, பிரதேச செயலாளரிடம் அனுமதியற்ற மதுபான சாலைகள் தொடர்பில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/59e7e7d5-107f-4673-9a48-c61d9096e0fe/25-67af4b24ec48a.webp)