தொடருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

Colombo Train Crowd
By Mayuri Jul 01, 2024 07:30 AM GMT

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணித்த தொடருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று (30) மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த தொடருந்து மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணாடி துண்டுகளால் தாக்குதல் 

இதன்போது சில பயணிகள் கண்ணாடி துண்டுகளால் தாக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடருந்து மீது கல்வீச்சு தாக்குதல் | Dematagoda Train Station Stone Attack

மேலும், இந்த தாக்குதலை பொருட்படுத்தாமல் தொடருந்து தொடர்ந்தும் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW