இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Central Bank of Sri Lanka
By Mayuri Jul 26, 2024 10:38 AM GMT
Mayuri

Mayuri

சட்டவிரோதமான முறையில் பணத்தை வைப்புத் தொகையாக ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பில், உடனடியாக தெரிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில்அண்மையில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே, ஆளுநர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொள்கை வட்டி வீத மாற்றங்கள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் நடத்தப்பட்ட நான்காவது கொள்கை வட்டி வீத மாற்றங்கள் பற்றிய அறிவித்தல் பற்றி இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை | Demanimmediate Reporting Of Illegal Cash Deposits

கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதால், கடன் வசதிகளை வழங்கும்போது வட்டி வீதங்களை குறைக்க வேண்டுமென,நிதி நிறுவனங்களுக்கு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

வட்டி வீதங்களைக் குறைக்கும் வகையில் வங்கி மற்றும் நிதியை ஒழுங்குபடுத்த மத்திய வங்கி தற்போது தயாராக இல்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW