ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் காணப்படும் இடங்களை கண்டறிவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோடபாயவினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண புத்திஜீவிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளளனர்.
இது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி ஆகும்.
மேலும் அவர்கள் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக நிலங்களையும் வாழ்விடங்களையும் தொல்பொருளென வகைப்படுத்தி அவற்றை சுவீகரிக்கும் நோக்கில் இக்குழு அமைக்கப்பட்டது.
கிழக்கில் தொல்பொருள் ஆய்வு
இக்குழுவில் இருந்த பலர் அவர்கள் நியமிக்கப்பட்ட போது இருந்த பதவிகளில் தற்போது இல்லை.
கடந்த 2020 ஜூன் மாதம் நிறுவப்பட்ட இந்த செயலணியில் பெரும்பான்மையானோர் பௌத்த தேரர்களாகவும் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான அரச அதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இந்த செயலணியினது செயற்பாடுகள் தொடர்பில், சிறுபான்மையினரிடையே பல்வேறு சந்தேகங்களும் அச்சமும் ஏற்பட்டிருந்தன.
அப்போதைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் மிகக்கடுமையாக இக்குழுபற்றி விமர்சித்து, இது கலைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த போதும் அன்றைய ஜனாதிபதியும் அரசும் இதுபற்றி எதனையும் கவனத்திலெடுக்கவில்லை.
புத்திஜீவிகளின் கோரிக்கை
இக்குழு அமைக்கப்பட்ட பின் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் இருப்புகளுக்கும் அவர்களது பூர்வீக காணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது
மேலும், சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களின் குறிப்பாக கிழக்கு மாகாணத்து மக்களின் இருப்புக்கு ஆபத்தான இக்குழு உடனடியாக கலைக்கப்பட்டு வெற்றும் வெறிதுமாக ஆக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண புத்திஜீவிகள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |