தமிழ் மக்களின் கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார்

Colombo Sri Lanka
By Nafeel Apr 30, 2023 01:44 PM GMT
Nafeel

Nafeel

வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் அண்மையில் பொதுமுடக்கத்தை அமைதியான முறையில் முன்னெடுத்திருந்த நிலையில் அவர்களின் கோரிக்கையில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடந்த 25ஆம் திகதி பொதுமுடக்கம் முன்னெடுக்கப்பட்டது.

மக்களின் பேராதரவுடன் பொதுமுடக்கம் வெற்றிபெற்றது. இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கொழும்பு ஊடகம் எழுப்பிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பொதுமுடக்கத்தை ஒரு தரப்பினர் வெற்றி என்று சொல்வார்கள். மற்றொரு தரப்பினர் தோல்வி என்பார்கள். ஆனால், பொதுமுடக்கத்தை அமைதியாக மக்கள் முன்னெடுத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துதியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.