டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட உமர் முகமது
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட மாதிரியும் கார் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துபோயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு
டெல்லி - செங்கோட்டை அருகே கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சுமார் 3 மணி நேரமாக செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரொன்று மாலை 6.48 மணியளவில் மெதுவாக நகர்த்தப்பட்டு வெடித்து சிதறியது.

வெடிக்கும் முன் அந்த காரின் சாரதி ஆசனத்தில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது டி.என்.ஏ பரிசோதனையிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.