மிருக காட்சிசாலையை இலவசமாக பார்வையிட கிடைத்துள்ள வாய்ப்பு
தெஹிவளை, மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் 3ம் திகதி மிருகக்காட்சிசாலையை 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் இலவசமாக பார்வயைிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கு 87 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
87ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு, ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.
மிருகங்களையும் அவை வாழும் சூழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் தெளிவினை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.