தெஹிவளை கொலை - சிசிரிவி காணொளி வௌியானது
தெஹிவளை, வைத்தியசாலை வீதிப் பகுதியில் வைத்து இருவர் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தி ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி எமக்குக் கிடைத்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பவத்தில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை தெஹிவளை பகுதியில் உள்ள குளிரூட்டி பழுது பார்க்கும் நிலையத்திற்கு வந்த நபரொருவர் அங்கு பை ஒன்றை அருகில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த தொழிலாளர்கள் கும்பல் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அவரது வணிக இடத்திற்கு அழைத்துச் சென்று, நேற்று முன்தினம் தங்கள் கடையில் பொருட்களை திருடிவிட்டதாக கூறி அடித்துள்ளனர்.
பின்னர் அவருக்கு உதவிய மற்றுமொரு நபருக்கு குறித்த நபரை வைத்து அழைப்பை ஏற்படுத்திய சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளனர். அதன்படி குறித்த இடத்திற்கு வந்த இளைஞன் ஒருவரை அவர் வந்த முச்சக்கர வண்டியுடன் சேர்த்து பிடிக்க வர்த்தக நிலைய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட வணிக இடத்தில் சுமார் 8 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு உரிமையாளர், முகாமையாளர் மற்றும் பணியாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.