பிறப்பு விகிதம் வீழ்ச்சியால் நாட்டில் ஏற்படப் போகும் சிக்கல்

Kandy Sri Lankan Peoples Digital Birth Certificate
By Benat Jan 24, 2025 05:17 AM GMT
Benat

Benat

நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது எதிர்கால தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 247,900 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிறப்பு விகதம் குறைவு என்பதில் நாட்டில் பல்வேறு வகையாக பிரச்சினை உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான நெருக்கடி

எதிர்காலத்தில் பாடசாலைகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும். அத்துடன் தொழில்துறைகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கவும் நேரிடும் அபாயம் உள்ளது.

பிறப்பு விகிதம் வீழ்ச்சியால் நாட்டில் ஏற்படப் போகும் சிக்கல் | Declining Birth Rate In Sri Lanka Country In Risk

இதற்கிடையில், நாட்டில் முதியோர் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இறப்பு விகிதம்

இதனால் சுகாதார சேவைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுகாதார செலவு கடுமையாக அதிகரிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

பிறப்பு விகிதம் வீழ்ச்சியால் நாட்டில் ஏற்படப் போகும் சிக்கல் | Declining Birth Rate In Sri Lanka Country In Risk

நாட்டில் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல மேலும் தெரிவித்தார்.