வீழ்ச்சியடைந்துள்ள மதுபான உற்பத்தி

Sri Lanka Economy of Sri Lanka
By K. S. Raj Feb 19, 2024 01:47 AM GMT
K. S. Raj

K. S. Raj

இலங்கையில் மதுபான உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச நிதி முகாமைத்துவ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் மதுபான உற்பத்தி 13.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

மொத்த மதுபான உற்பத்தி

இந்தநிலையில் 2022 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதியில் நாட்டின் மொத்த மதுபான உற்பத்தி 31.2 மில்லியன் லீற்றர் எனவும், கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்த தொகை 27 மில்லியன் லீற்றர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீழ்ச்சியடைந்துள்ள மதுபான உற்பத்தி | Declining Alcohol Production