கொலை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை: களுத்துறை மேல் நீதிமன்றில் தீர்ப்பு
Kalutara
Sri Lanka
Kalutara Incident
By Fathima
களுத்துறையில் நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் 8 பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
சுமார் 20 வருடங்கள் நீடித்த நீண்ட விசாரணையின் பின்னர் நேற்று(27.09.2023) களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன குறித்த மரணதண்டனையை விதித்துள்ளார்.
மரண தண்டனை
களுத்துறை தெற்கு கலில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த 8 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க களுத்துறை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் 8 குற்றவாளிகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.