வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடத்தி கொலை செய்த சம்பவம்
2013ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீண்ட பரிசீலனைக்கு பிறகு, உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |