7 கடற்றொழிலாளர்களுக்கு மரணத்தண்டனை

By Fathima Jan 24, 2024 07:11 AM GMT
Fathima

Fathima

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 கடற்றொழிலாளர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு கடற்றொழில் படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இன்று (24) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடூழியச் சிறைத்தண்டனை 

வழக்கு தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

7 கடற்றொழிலாளர்களுக்கு மரணத்தண்டனை | Death Penalty For Seven Fishermen Srilanka

கடந்த (15.10.2012) ஆம் ஆண்டு அன்று,  இலங்கைக் கடற்கரையில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற கடற்றொழில் கப்பலை கடத்திச் சென்ற 7 கடற்றொழிலாளர்கள், மூன்று கடற்றொழிலாளர்களைக் கொன்றதுடன் பல கடற்றொழிலாளர்களைக் கடுமையாகக் காயப்படுத்தியதுடன் படகை கடத்தி அவுஸ்திரேலியா அனுப்பி வைத்துள்ளனர் .

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிவாதிகளுக்கு 29 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தலா 2 மில்லியன் ரூபா 8500 அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணை

மேலும், மூன்று பிரதிவாதிகள் வழக்கு விசாரணையின் போது அல்லது விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே இறந்துவிட்டதால், 8 பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டன. 

அத்துடன் வழக்கின் 10 வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பிரதிவாதியை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.