இஸ்ரேலுக்கு உளவுச்செய்தி அனுப்பிய 8 இந்தியர்கள் விவகாரம் : தீர்ப்பை மாற்றியமைத்த கட்டார்

Qatar India Israel
By Madheeha_Naz Dec 29, 2023 01:53 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

கட்டாரிலிருந்து இஸ்ரேலுக்கு உளவு வேலை பார்த்ததாக குற்றம்சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 இந்தியர்களுக்கு குறித்த தண்டனை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாரில் (Qatar) அல் தஹ்ரா (Al Dahra) எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இந்திய கடற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 8 பேர் அந்நாட்டில் பணியாற்றி கொண்டே இஸ்ரேல் நாட்டிற்கு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் கத்தார் நீதிமன்றத்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேலுக்கு உளவுச்செய்தி அனுப்பிய 8 இந்தியர்கள் விவகாரம் : தீர்ப்பை மாற்றியமைத்த கட்டார் | Death Penalty For Indian Ex Navy Officers Qatar

இந்நிலையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை கட்டார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பத்தினர் மற்றும் பலர் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

குறைந்த தண்டனை

இதுமட்டுமன்றி கட்டாருக்கான இந்திய தூதுவர் சிறையில் அடைக்கப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

இஸ்ரேலுக்கு உளவுச்செய்தி அனுப்பிய 8 இந்தியர்கள் விவகாரம் : தீர்ப்பை மாற்றியமைத்த கட்டார் | Death Penalty For Indian Ex Navy Officers Qatar

இதன்போது கட்டார் நீதிமன்றம் அவர்களுக்கு விதித்திருந்த மரண தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதாகவும், குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

மேலும் புதிய தண்டனையின் விவரம் குறித்து இதுவரை இரு நாட்டு அரசாங்கங்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.