மரணம் ஒன்றே மனிதனை வெல்லும்.
மரணம் ஒன்றே மனிதனை வெல்லும்.
தடுக்கி விழுந்தவனும் இறந்துட்டான்.
தடுமாறி குடித்தவனும் இறந்துட்டான்.
அடுக்குமாடி கட்டியவனும் இறந்துட்டான்.
அடுக்கடுக்காய் பணம் சேர்த்தவனும் இறந்துட்டான்.
அடுத்தவனை கெடுத்தவனும் இறந்துட்டான் -
அதை தடுத்து நல்லது செய்தவனும் இறந்துட்டான்.
இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்.
இறப்பில் வந்து அழுதவனும் இறந்துட்டான் .
இறைவனை நேசித்தவனும் இறந்துட்டான்
இறையருளை மறுத்தவனும் இறந்துட்டான்.
கருணை உள்ளம் கொண்டவனும் இறந்துட்டான்.
கருமங்கள் பல செய்தவனும் இறந்துட்டான்.
பறந்து பறந்து உழைத்தவனும் இறந்துட்டான்.
பருவ வயதை தொட்டவனும் இறந்துட்டான்.
பருவமடைய பாலகனும் இறந்துட்டான்.
கருவறையில் சுமந்தவளும் இறந்துட்டாள்.
கரு ஊட்டிய கணவனும் இறந்துட்டான்.
கந்தலாடை உடுத்தவனும் இறந்துட்டான்.
காசி காசி என்று அலைந்தவனும் இறந்துட்டான்.
சொந்தங்களை வெறுத்தவனும் இறந்துட்டான்.
சொந்தம் என்று கெடுத்தவனும் இறந்துட்டான்.
மந்தி போல் வாழ்ந்தவனும் இறந்துட்டான்.
மாடு போல் உழைத்தவனும் இறந்துட்டான்.
சன்னியாசியாய் வாழ்ந்தவனும் இறந்துட்டான்.
சாகா வரம் பெற்றவரும் இறந்துட்டான்.
சத்தியத்தை மீறியவனும் இறந்துட்டான்.
சத்தியத்துடன் வாழ்ந்தவனும் இறந்துட்டான்.
புத்திமதி சொன்னவனும் இறந்துட்டான்.
புத்திகட்டு அலைந்தவனும் இறந்துட்டான்.
இப்ப நீ மட்டும் வாழ்ந்தென்ன செய்யப் போகிறாய் நீயும் ஒரு நாள் இறக்கப் போகிறாய்.
நன்றியுடன்,
உங்கள் ஐனி,
கிண்ணியன்,
2023/05/10.