அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு...

Climate Change Weather Cyclone Ditwah
By Fathima Dec 09, 2025 09:27 AM GMT
Fathima

Fathima

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளதுடன் 191 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இன்று முற்பகல் 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

சீரற்ற காலநிலை

மேலும்,  501,958 குடும்பங்களைச் சேர்ந்த 1,737,330 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு... | Death Count Increase In Sri Lanka

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 இறப்புகளும், குருநாகல மாவட்டத்தில் 61 இறப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 இறப்புகளும், புத்தளத்தில் 37 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, 20,373 குடும்பங்களைச் சேர்ந்த 63,628 பேர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.