கம்பஹா பொது வைத்தியசாலையில் மற்றுமொரு மரணம் பதிவு

Gampaha University of Sri Jayawardenapura Sri Lanka Hospitals in Sri Lanka
By Fathima Aug 12, 2023 10:26 PM GMT
Fathima

Fathima

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்து ஒவ்வாமை காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நோயாளி உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் நோய் எதிர்ப்பு மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழுவின் முடிவுகளின் படி, இரு நோயாளிகள் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்த கூறியுள்ளார்.