செவிப்புலன் இழந்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கத் தீர்மானம்
இலங்கையில் பூரணமாக செவிப்புலனை இழந்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் பூரண செவிப்புலனை இழந்த 388000 பேர் வாழ்ந்து வருவதாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் சுமார் 40000 பேர் கம்பஹா மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் செவிப்புலன் இழந்தவர்களுக்கு இலகு ரக வாகனங்களை செலுத்துவதற்காக ஓட்டுனர் உரிமம் வழங்கும் செயல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
கம்பஹாவில் பரீட்சார்த்த அடிப்படையில் திட்டம் ஆரம்பம்
பரீட்சார்த்த அடிப்படையில் இந்த திட்டம் கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில் ஏனைய மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி அமைச்சரவையில் செவிப்புலனற்றவர்களுக்கு இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.