அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமைகள்

Sri Lankan Peoples Eastern Province Sri Lanka Fisherman
By Rakshana MA Jan 21, 2025 04:49 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டத்தில்  மருதமுனை - பாண்டிருப்பு பிரதேசத்தில் நேற்று(20) இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடையும் இருக்குமென கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

கரையொதுங்கும் கடலுயிரினங்கள்

இது தொடர்பில் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கையில்,

ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில், குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது. இதே போன்று கடந்த வாரமும் பெரிய நீலாவணை பகுதியிலும் பெரிய கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது என கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமைகள் | Dead Turtles Washed Ashore On The Ampara Beaches

இதனையடுத்து, ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மை காலங்களில் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்

கிழக்கில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்

தங்கம் வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல் : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கம் வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல் : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW