கிளிநொச்சியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு

Kilinochchi Sri Lanka Death
By Yathu Jan 20, 2024 06:35 AM GMT
Yathu

Yathu

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலுள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் இன்றைய தினம் (20.01.2024) மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் உயிரிழந்தவர் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் என தெரியவருகிறது. 

மேலதிக விசாரணை

குறித்த நபர் நேற்று (19.01.2024) மாலை 7 மணியளவில் மது போதையில் இருந்த நிலையில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார். 

எனினும், அவர் இன்று (20.01.2024) காலை  சடலமாக காணப்படுவதை கண்ட மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இந்நிலையிலேயே,  நீதவான் முன்னிலையில்  சடலம் வைக்கப்பட்டு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.