வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Aug 12, 2023 07:22 AM GMT
Chandramathi

Chandramathi

சிலாபம் மேற்கு இரணைவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 09 வயதுடைய சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று(11.08.2023) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணத்தில் சந்தேகம்

மரணத்தில் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையால் சிலாபம் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி! | Dead Body Of A 9 Year Old Girl From A House

சிறுமியின் தாய் கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் பணி புரிந்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை குடியிருப்பில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.