கொழும்பு, கோட்டை தொடருந்து நிலைய பகுதியிலிருந்து சடலம் மீட்பு

Colombo Death
By Mayuri Jul 16, 2024 05:12 AM GMT

கொழும்பு, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸாருக்கு நேற்று (15) கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

உயிரிழந்தவரின் அடையாளம்

உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரமுடைய 60 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கோட்டை தொடருந்து நிலைய பகுதியிலிருந்து சடலம் மீட்பு | Dead Boady Found Near Railwaystation

மேலும், அவர் மேற்சட்டை, சிவப்பு நிற சாரம் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW