ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்: தயாசிறி சூளுரை

SLFP Dayasiri Jayasekara
By Kamal Dec 29, 2023 02:57 AM GMT
Kamal

Kamal

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் கூறியுள்ளார்.

மேலும், சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினர் தமக்கு ஆதரவளிப்பதாகவும் தேர்தலில் போட்டியிட தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து 537 பெண்கள் வீட்டு பணியாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு பயணம்

வவுனியாவில் இருந்து 537 பெண்கள் வீட்டு பணியாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு பயணம்

ஜனாதிபதி தேர்தல்

சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் தாம் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார் என அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்: தயாசிறி சூளுரை | Dayasiri Jayasekara Slfp Rift

இதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்கிய தீர்மானத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அனுமதி அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தயாசிறி ஜயசேகர இதுவரையில் வகித்து வந்த குருணாகல் மாவட்ட சுதந்திரக்கட்சித் தலைமைப் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு

இன்றைய காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு

இலங்கையில் பல குடும்பங்களின் மாத வருமானம் குறைந்தது: கணக்கெடுப்பில் வெளியான தகவல்

இலங்கையில் பல குடும்பங்களின் மாத வருமானம் குறைந்தது: கணக்கெடுப்பில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW