ரமழான் நாள் 2 : தியானம் மற்றும் துஆ செய்யுங்கள்

Ramadan Sri Lankan Peoples World
By Rakshana MA Mar 03, 2025 06:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

தியானம் மற்றும் துஆ செய்வது மனிதர்களுக்கு மன அமைதியையும் ஆன்மிக வளர்ச்சியையும் அளிக்கும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.

இந்நிலையில் ரமழான் மாதத்தில் இந்த செயல்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றது.

உப்பு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

உப்பு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

தியானத்தில் ஈடுபடுவதால் பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கின்றன. அவையாவன,

  • மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கின்றது.
  • ஆன்மாவை தூய்மையாக்கி ஆன்மிக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • நம்மை நாமே புரிந்து கொள்ளவும் சுய மதிப்பீட்டுக்கும் உதவுகிறது.

ரமழான் நாள் 2 : தியானம் மற்றும் துஆ செய்யுங்கள் | Day 2 Of Ramadan Meditation And Pray

அதேபோல் அல்லாஹ்விடம் துஆ கேட்பதன் மூலம்  இன்னும்  அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன.

  • இவ்வாறு துஆ பிரார்த்தனையில் ஈடுபடும் போது அல்லாஹ்வின் அருளினை பெற்றுக்கொள்ளலாம்.
  • பாவங்கள் மன்னிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.
  • துஆ செய்வதால் மனதிற்கு அமைதி கிடைக்கிறது.

ரமழான் நாள் 01 : அல்லாஹ்வின் அருளை நாடுங்கள்

ரமழான் நாள் 01 : அல்லாஹ்வின் அருளை நாடுங்கள்

ரமழானில் தியானம் மற்றும் துஆ

ரமழான் மாதத்தில் தியானம் மற்றும் துஆ செய்வது மிகவும் சிறப்பான விடமாகும். இந்த மாதத்தில் அல்லாஹ்வின் அருள் மிகுதியாக கிடைக்கின்றது ஆகையால் முஸ்லி்ம்கள் இந்த நேரங்களை வீணாக்க விரும்ப மாட்டார்கள்.

இந்த மாதத்தில் தினமும் குறிப்பிட்ட நேரம் உண்டு. அதில் தியானம் செய்து துஆ கேட்பது அனைத்து நன்மைகளையும்  ஏற்படுத்தக்கூடியது என முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாக நம்பப்பட்டு வரும் உண்மையாக உள்ளது.

ரமழான் நாள் 2 : தியானம் மற்றும் துஆ செய்யுங்கள் | Day 2 Of Ramadan Meditation And Pray

ரமழான் மாதத்தை சிறப்பாக கழிக்க வேண்டும் என்றால், தியானம் மற்றும் துஆ செய்வதை தவிர்க்கக்கூடாது.

இந்த செயல்களை ரமழான் மாதத்தில் செய்வதன் மூலம் அனைவரும் அல்லாஹ்வின் அருளை பெற்று ஆன்மிக வளர்ச்சியை அடையலாம். 

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே பரப்பப்படும் தீவிரவாத சிந்தனைகள் - எச்சரிக்கும் அரசாங்கம்

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே பரப்பப்படும் தீவிரவாத சிந்தனைகள் - எச்சரிக்கும் அரசாங்கம்

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW