கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான பொருள்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Fathima
கொழும்பு - கெசல்வத்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைவிடப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் 29 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்திற்கு துப்பாக்கியை கொண்டு வந்த சந்தேகநபர்களைக் கண்டுபிடிக்க கெசல்வத்த பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.