பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கசிந்துள்ள தகவல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா(Dhammika Perera) நியமிக்கப்படவுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க(Udayanga Weeratunga) குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நேற்றையதினம்(29) இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் போது, மொட்டுச் சின்னத்தில் பிரத்தியேக வேட்பாளரை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர்
இந்த நிலையில் குறித்த வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும் அந்த கட்சி தம்மிக்க பெரேராவையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவிக்கவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியின் நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.