கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் அன்னதான மண்டப திறப்பு விழா

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Dec 29, 2024 10:28 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதி செயலகத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் அன்னதான மண்டபம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின்(MHM.Haris) D-100 திட்டத்தினூடாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவானது நேற்று(28) கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

விசாரணையின் போது தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி : 7 பேர் கைது

விசாரணையின் போது தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி : 7 பேர் கைது

அன்னதான மண்டபம் 

மேலும், கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மாணிக்கமடு ரஜமகா விகாரையின் விகாராதிபதி சீலரத்தன தேரர் ஆகியோரின் பிரசன்னத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு விகாரையின் அன்னதான மண்டபத்தை திறந்து வைத்துள்ளார்.

கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் அன்னதான மண்டப திறப்பு விழா | D 100 Project Scheme In Sri Lanka

தொடர்ந்தும் இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.விஜிகரன், கே.எல்.சபீக் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் சுமார் 5 மில்லியன் ரூபாய் நிதியில் இந்த அன்னதான கட்டிடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மக்களுக்கு சீன அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட நிவாரணம்

திருகோணமலை மக்களுக்கு சீன அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட நிவாரணம்

மக்களின் கணக்குகளில் வைப்பிலப்படவுள்ள பணத்தொகை! வெளியான தகவல்கள்

மக்களின் கணக்குகளில் வைப்பிலப்படவுள்ள பணத்தொகை! வெளியான தகவல்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery