இலங்கையிலிருந்து நகர்ந்து செல்லும் தித்வா புயல்!

Sri Lankan Peoples Weather Cyclone
By Fathima Nov 29, 2025 05:16 AM GMT

இலங்கையை அண்மித்த பகுதியில் நிலை கொண்டிருந்த தித்வா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம்(30.11.2025) தமிழகத்தை புயல் தாக்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தாக்கம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து நகர்ந்து செல்லும் தித்வா புயல்! | Cyclonic Storm Ditwah Sri Lanka

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் சற்று வழமை நிலை திரும்பியுள்ள போதும், நாளை முதல் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இருப்பினும் இலங்கையின் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான வசதிகள்

அத்துடன் தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

இலங்கையிலிருந்து நகர்ந்து செல்லும் தித்வா புயல்! | Cyclonic Storm Ditwah Sri Lanka

மலையகம் முழுமையாக முடங்கியுள்ளதுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பலர் இடர்காப்பு முகாமைத்துவ நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.