இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி; மக்களுக்கு எச்சரிக்கை!

Sri Lanka
By Nafeel May 08, 2023 04:00 PM GMT
Nafeel

Nafeel

நாட்டில் நாளை சூறாவளி ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை காணப்படும் இந்த அமைப்பு படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் நாளை சூறாவளியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை காணப்படும் எனவும், அது மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.