இலங்கைக்கு உதவ தயார்! இந்திய பிரதமரின் அதிரடி அறிவிப்பு

By Fathima Nov 28, 2025 11:04 AM GMT
Fathima

Fathima

டிட்வா சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், ஆறுதலுக்கும், விரைவான மீட்சிக்கும் நான் பிரார்த்திக்கிறேன்.

இலங்கைக்கு உதவ தயார்! இந்திய பிரதமரின் அதிரடி அறிவிப்பு | Cyclone Ditva And Severe Weather

இந்தியாவின் 'சாகர் பந்து' நடவடிக்கையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிலைமைக்கு ஏற்ப மேலும் பல உதவிகள் மற்றும் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்த நேரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் நிற்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.