வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
Sri Lanka
Department of Meteorology
Crime
By Laksi
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் (Department of Meteorology) உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், அதனை கூடிய விரைவில் மீளமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணையத்தளம் முடக்கம்
இந்த நிலையில், குறித்த இணையத்தளம் முடக்கம் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த நவம்பர் 12ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |