டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக சில பொருட்களுடன் கொள்கலன் இறக்குமதி

Sri Lanka Dubai
By Fathima Jun 06, 2023 10:14 AM GMT
Fathima

Fathima

கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக சில பொருட்களுடன் இந்த கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலனில் இருந்து 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அழகுசாதனப் பொருட்கள், மூன்று வாகனங்களை ஒன்று சேர்ப்பதற்குத் தேவையான பாகங்கள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் என்பன குறித்த கொள்கலனில் காணப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.