ஊரடங்குச்சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2024 ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (22) காலை 06.00 மணி வரை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனினும், ஊரடங்கு சட்டம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பின்னர் தெரிவித்தது.
நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுவது அவசியம் என தாம் கருதுவதாக தெரிவித்து ஜனாதிபதி சனிக்கிழமை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (அத்தியாயம் 40) பிரிவு 16ன் கீழ் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், எந்தவொரு பொது சாலை, ரயில்வே, பொது பூங்கா, பொது பொழுதுபோக்கு மைதானம் அல்லது பிற பொது மைதானம் அல்லது கடற்கரையோரங்களில் யாரும் இருக்கக் கூடாது என்று ஜனாதிபதி உத்தரவிட்டார்.
தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.