சம்மாந்துறையில் இன நல்லுறவை கட்டியெழுப்பும் கலாசார நிகழ்வுகள் முன்னெடுப்பு

Sinhala and Tamil New Year Sri Lanka Europe
By Farook Sihan May 06, 2023 10:13 AM GMT
Farook Sihan

Farook Sihan

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்ஸில் நிதிப்பங்களிப்புடன் மக்கள் மத்தியில் இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது நேற்றைய தினம் (05.05.2023) சம்மாந்துறை கோரக்கர் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறையில் இன நல்லுறவை கட்டியெழுப்பும் கலாசார நிகழ்வுகள் முன்னெடுப்பு | Cultural Events Aimed At Building Racial Harmony

இதன்போது சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரு மாற்றத்தை நோக்கி குழுவினர் ஒழுங்கு செய்திருந்த காட்சிப் பலகையில் நிகழ்விற்கு வருகை தந்ந பிரதம விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் இளங்கோவன், பள்ளிவாசல் நிர்வாக சபையினர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் போன்றவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery