அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலையில் உடனடி சரிவு!
சர்டவதேச எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்நத் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை உள்ளடக்கிய, நிபந்தனைக்குட்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 1 மாதத்திற்குய் மேலாக நடந்து வரும் நிலையில், ஈரான் உச்சத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

அதனால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான். உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கியிருந்தது.
அதனை தொடர்ந்து, ஹார்முஸைத் திறக்காவிடில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்திருந்த ட்ரம்ப். முதற்கட்டமாக 2 நாட்கள் ஈரானுக்கு கெடு விதித்திருந்தார்.
ஈரானின் ஒத்துழைப்பு காரணமாக, மேலும் 10 நாட்களுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்தார் எனினும் ஈரான் தொடர்ந்து இதை மறுத்து வந்தது.
இந்த சூழலில் தான், நேற்றைய முன் தினம் ஹார்முஸைத் திறக்க ஈரானுக்கு 24 மணி நேரம் கெடு விதிப்பதாகவும், இதுவே கடைசி கெடுவாக இருக்கும் எனவும் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தக் கெடு நேற்று இரவு 8 மணியுடன் (இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி) நிறைவடைய 10 நிமிடங்கள் இருந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையை முழுவதுமாக திறக்க ஈரான் முன்வந்துள்ளது.
ஈரான் - அமெரிக்க மோதலால், 1 பீப்பாய் கச்சா எண்ணெய் 110-க்கும் மேல் உயர்ந்திருந்தது. இந்த சூழலில், இந்த இடைக்காலப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, 100 டாலருக்கும் கீழ் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது.அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயன் விலை கிட்டத்தட்ட 18% விலை குறைந்து வருகிறது.
அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின் மூலமே, நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுமா அல்லது இந்தப் போர் மீண்டும் தொடருமா என்பது குறித்த முடிவு எட்டப்படும்.