இலங்கையாக மாறிய பங்களாதேஷ்! எதிர்க்கட்சி ஜாதியா கட்சியின் தலைவர் கடும் விமர்சனம்
பங்களாதேஷ் மௌனமாக இலங்கையாக மாறிவிட்டதாக கூறியமை தொடர்பில் அந்த நாட்டின் எதிர்க்கட்சியான ஜாதியா கட்சியின் தலைவர் மீது விமர்சனம் வெளியிட்டுள்ளது.
ஜாதிய கட்சியின் தலைவரும் துணை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் முஹம்மது குவாடர் மீது, ஆளும் அவாமி லீக், இந்த விமர்சனத்தை வெளியிடப்பட்டுள்ளது.
நயவஞ்சகர்கள் அனைவரும் பொய்யர்கள் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். எனினும் தாம்; அவரை ஒரு பொய்யர் என்று அழைக்க விரும்பவில்லை. அவர் தவறு செய்திருக்கலாம், யாரோ ஒருவரிடமிருந்து தவறான போதனையைப் பெற்றிருக்கலாம் என்று ஆளும் அவாமி லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபிக்கர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறிய ஷாபிக்கர்
ரஹ்மான், பார்வையற்றவர்கள் கண்களை அறுவை சிகிச்சை செய்துகொள்ளவேண்டும் என்று
தெரிவித்துள்ளார்.