தந்தையை அடித்து கொன்ற மகளின் காதலன்!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Chandramathi Jul 09, 2023 06:35 AM GMT
Chandramathi

Chandramathi

அவிசாவளை-பதுவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் வீட்டில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தவரின் மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞருக்கும் பெண்ணிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இளைஞன் கூரிய ஆயுதத்தால் யுவதியை தாக்கியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது, குறுக்கிட்ட யுவதியின் தந்தையையும் அந்த இளைஞன் தாக்கியுள்ளார்.

தந்தையை அடித்து கொன்ற மகளின் காதலன்! | Crime In Sri Lanka Police Investigation

60 வயதான தந்தை சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகளும் தாக்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய சந்தேகநபர் அவிசாவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.