ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிரிக்கெட் வீரர் மகேஷ் திக்சனாவினால் உதவி
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏறாவூரில் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதன்படி, இந்த நிதியுதவியை கொண்டு விளையாட்டு கழகமொன்றினால் 100பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நிதியுதவி
ஏறாவூரில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைப்பாட்டினை அறிந்து இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவிடம் ஏறாவூரிலுள்ள விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும், இலங்கை பொலிஸ் அணி மற்றும் பேஸ்போல் விளையாட்டு வீரரொருவரினால் சமூக வலைத்தளத்தின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இது வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கமைய விளையாட்டுக் கழகம் வெள்ளத்தல் பாதிக்கப்பட்ட குடும்பகளிலுள்ள 100 குழந்தைகளை தெரிவு செய்து, அவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான பால்மா மற்றும் இதர பொருட்கள் அடங்கிய பொதிகனை வழங்கிவைத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |